/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு 5 இடம் தான் முன்னாள் அமைச்சர் ஆருடம்
/
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு 5 இடம் தான் முன்னாள் அமைச்சர் ஆருடம்
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு 5 இடம் தான் முன்னாள் அமைச்சர் ஆருடம்
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு 5 இடம் தான் முன்னாள் அமைச்சர் ஆருடம்
ADDED : செப் 21, 2024 02:54 AM
கரூர்: ''வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஐந்து இடங்களில்தான் வெற்றி பெறும்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரி-வித்தார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா-துரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், மாவட்ட அவைத்த-லைவர் திருவிகா தலைமையில், வெங்கமேட்டில் நேற்று இரவு நடந்தது. மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்-சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில், 520 வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க., 3 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நீட்
தேர்வு ரத்து, புதிய ஓய்வூதியம் ரத்து, கல்வி கடன் ரத்து, நகை கடன் ரத்து, கேஸ் சிலிண் டருக்கு மான்யம் உள்ளிட்ட, பல வாக்-குறுதி
களை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. மேலும், அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், பசு மாடு, கோழி குஞ்சுகள்
வழங்கல், தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம், லேப்டாப் திட்டம் உள்ளிட்ட, பல திட்டங்களை தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது.இதனால், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஐந்து இடங்க-ளில்தான் வெற்றி பெறும். தமிழக மக்கள் தி.மு.க., அரசை, 18 மாதங்களில்
வீட்டுக்கு அனுப்பி விடுவர். பிறகு வரும், பொதுச்-செயலாளர் இ.பி.எஸ்., தலை மையிலான அ.தி.மு.க., அரசில் நிறுத் தப்பட்ட திட்டங்கள்
நிறைவேற்றப்படும்.
சத்துணவுக்கு எம்.ஜி.ஆர்., தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் போல, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்-களுக்கு,
பொதுச்செயலாளர் இ.பி. எஸ்., கொண்டு வந்த, 7.5 சத-வீத இட ஒதுக் கீடு திட்டம் பேர் சொல்லும் திட்டமாக இருக்கும்.கடந்த, 2016-21 ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, கரூர் மாவட்டத்-துக்கு கொண்டு வந்த திட்டங்கள்தான் தற்போது நடைமுறையில்
உள்ளது. மூன்றரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், கரூர் மாவட்டத்துக்கு என்ன திட்டம் கொண்டு வரப்பட்டு, முழுமை அடைந்தது
என, தி.மு.க., வினரால் சொல்ல முடியாது.
தற்போது, வெண்ணைமலையில் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் என, வீடு, கடைகள், காலி நிலங்களுக்கு சீல்
வைக்கப்-படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் தி.மு.க., அரசு மீது கொந்த-ளிப்பில் உள்ளனர். என் மீது பொய் வழக்கு போட்டு, பல
தனிப்-படைகள் அமைத்து போலீசார் கைது செய்தனர். ஆனால், ஒன்-றரை ஆண்டுகளாக தலைமறை வாக உள்ள, முன்னாள் தி.மு.க.,
அமைச்சரின் தம்பி, அவரது உதவியாளரை போலீசார் கைது செய்-யாமல் உள்ளனர். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை,
விலைவாசி உயர்வு, வேலையின்மை, பல்வேறு கட்டண உயர்வால் தி.மு.க., ஆட்சியை வரும், 2026 ல் மே மாதத்தில் தமி-ழக மக்கள்
விரட்டி அடிப்பர்.இவ்வாறு அவர் பேசினார்.
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி
செயலாளர் தானேஷ் முத்து க்குமார், கரூர் ஒன்-றிய அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன், கரூர் வடக்கு நகர செயலாளர் அன்னமார்
தங்கவேல் உள்பட, பலர் பங்கேற்றனர்.