/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சூதாடிய 4 பேர் கைது மூன்று பைக் பறிமுதல்
/
சூதாடிய 4 பேர் கைது மூன்று பைக் பறிமுதல்
ADDED : நவ 12, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த ஆர்.டி., மலை தனியார் ஐ.டி.ஐ., பின்பகுதியில் சூதாடுவதாக தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த, ஆர்.டி.,மலை வடிவேலு, 41, சரவணகுமார், 36, சோமரசம்பேட்டை பரமசிவம், 45, தோகைமலை அஜித், 30, ஆகிய நான்கு பேரை கைது செய்து, 550 ரூபாய் மற்றும் இரண்டு பைக், ஒரு மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, தோகைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

