/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 01:30 AM
கரூர் கரூர் ஜவகர் பஜார் உள்ள தலைமை தபால் நிலையம் முன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வாக்காளர் தீவிர திருத்தை (எஸ்.ஐ.ஆர்.,) கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தேர்தல் ஆணையம் வாக்காளர் தீவிர திருத்த பணியை செயல்படுத்தி வருகிறது. மக்களாட்சியின் அடிப்படையான ஓட்டுரிமையையே பறிக்கும் எஸ்.ஐ.ஆர்., எனும் ஆபத்துக்கு எதிராக சட்டப் போராட்ட நடத்தப்படுகிறது. எனவே, எஸ்.ஐ.ஆர்., பணியை உடனடியாக தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, துணை மேயர் தாரணி சரவணன், ம.தி.மு.க., மாவட்ட செயலர் சிவா, மா.கம்யூ., மாவட்ட செயலர் ஜோதிபாசு, கரூர் மாநகர செயலர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலர்கள் ராஜா, சுப்பிரமணியன், ஜோதிபாசு, குமார், பாண்டியன், ஒன்றிய செயலர்கள் பாஸ்கரன், வேலுச்சாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

