/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று இலவச நாட்டுக்கோழிவளர்ப்பு பயிற்சி முகாம்
/
இன்று இலவச நாட்டுக்கோழிவளர்ப்பு பயிற்சி முகாம்
ADDED : ஜன 08, 2025 03:04 AM
இன்று இலவச நாட்டுக்கோழிவளர்ப்பு பயிற்சி முகாம்
கரூர் : கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர், பண்டுதகாரன்புதுார் கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு இலவச கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. அதில், புறக்கடை கோழி வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், கோழியினங்கள், கொட்டகை அமைத்தல், கோழிகளுக்கான தீவனம் தயாரித்தல், கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பல்கலை கழக பேராசிரியர்கள் பேசுகின்றனர். முகாமில், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 73390-57073, 04324-294335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.