/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மது குடிக்க மறுத்த நண்பருக்குஉருட்டு கட்டையால் அடி
/
மது குடிக்க மறுத்த நண்பருக்குஉருட்டு கட்டையால் அடி
மது குடிக்க மறுத்த நண்பருக்குஉருட்டு கட்டையால் அடி
மது குடிக்க மறுத்த நண்பருக்குஉருட்டு கட்டையால் அடி
ADDED : ஏப் 17, 2025 02:01 AM
கரூர்:கரூர் அருகே, மது குடிக்க வர மறுத்த நண்பரை உருட்டு கட்டையால் அடித்த, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கட்டளை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் பாபு, 31; இவரை கடந்த, 14 மாலை நண்பர்கள் மணிகண்டன், 29; பெரிய சாமி, 38; குபேந்திரன், 23; சூர்யா, 26; ஆகியோர் புலியூர் டாஸ்மாக் மதுபான கடைக்கு, மது குடிக்க அழைத்துள்ளனர். அதற்கு, தினேஷ் பாபு மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும், தினேஷ் பாபுவை உருட்டு கட்டையால் அடித்துள்ளனர்.
அதில், தலையில் படுகாயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தினேஷ் பாபு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, பசுபதிபாளையம் போலீசார், மணிகண்டன் உள்பட, நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.