/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்படி விநாயகர் சிலை தயாரிக்கப்பட வேண்டும்'

ADDED : ஜூலை 25, 2025 01:23 AM
கரூர், மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்படி, விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி, சிலைகளை தயாரிக்க வேண்டும். இதில், சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் விசர்ஜனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு, மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் சிறைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.