/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு தொடக்க பள்ளியில் உலக கை கழுவும் தினம்
/
அரசு தொடக்க பள்ளியில் உலக கை கழுவும் தினம்
ADDED : அக் 16, 2025 01:11 AM
கரூர், கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், உலக கை கழுவும் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். ஒவ்வொரு ஆண்டும் அக்., 15ம் தேதி உலக சுகாதார அமைப்பு உலக கை கழுவும் தினமாக அறிவித்துள்ளது. இந்தாண்டிற்கான கருப்பொருள் 'கைகழுவுதல் ஹீரோவாக இருங்கள்' என்பதாகும்.
இதனை வலியுறுத்தும் விதமாகவும், சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு நினைவூட்டும் விதமாகவும், ஆசிரியர் மனோகர் செயல் விளக்கம் அளித்தார். கை கழுவுதலில் உள்ள 8 படிநிலைகளை ஒவ்வொன்றாக செய்து காண்பித்து, மாணவர்களை செய்ய வைத்தார். உணவு உண்பதற்கு முன், பின், கழிவறை செல்வதற்கு முன், பின், என கை கழுவ வேண்டும் என எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வாசுகி, மகேஸ்வரி, சசிகலா உள்பட பலர்
பங்கேற்றனர்.