/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2025 01:46 AM
கரூர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதி, 309ன்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களை, காலமுறை ஊதியத்தில் பணியில் அமர்த்த வேண்டும், துறை ரீதியான சங்கங்களை தமிழக அரசு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன், செயலாளர் சிங்க ராயர், பொருளாளர் வெங்கடேஷ்வரன், இணை செயலாளர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.