/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் 11ல் கிராம சபை கூட்டம்
/
கரூர் மாவட்டத்தில் 11ல் கிராம சபை கூட்டம்
ADDED : அக் 08, 2025 01:31 AM
கரூர், 'வரும், 11ல் கிராம சபை கூட்டம் நடக்கும்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், அக்.,2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடத்தப்பட இருந்த கிராம சபை கூட்டமானது, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கிராமசபை கூட்டம் வரும், 11ல் நடக்கும். கிராம மக்களின், 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல், பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை, ஊரக பகுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும், சபாசார் செயலி செயல்பாடு உள்பட பல்வேறு பொருள் குறித்தும் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.