ADDED : அக் 08, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர், தெற்கு காந்திகிராமம், சக்தி நகர் விளையாட்டு மைதானத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
6 பேருக்கு காலியிட வரி மற்றும் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், வருவாய்த் துறையின் சார்பில், 4 பேருக்கு பிறப்பிட சான்று மற்றும் வருமான சான்று உள்ளிட்ட சான்றிதழ்களையும் என மொத்தம், 10 பேருக்கு வழங்கினார். முகாமில், டி.ஆர்.ஓ., கண்ணன், ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாநகராட்சி கமிஷனர் சுதா, துணை மேயர் சரவணன்
உள்பட பலர் பங்கேற்றனர்.