/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலமலை முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி விழா
/
பாலமலை முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி விழா
பாலமலை முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி விழா
பாலமலை முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி விழா
ADDED : அக் 08, 2025 01:32 AM
கரூர், க.பரமத்தி அருகில் பாலமலை பாலசுப்பிரமணி கோவிலில் திருப்புகழ் திருப்படி விழா நடந்தது. விழாவையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பின், பக்தர்கள் கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். பின், விநாயகர் வழிபாட்டு திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கி அனைத்து படிகளுக்கும் தலைவாழை இலை வைத்து,
அதன்மேல் பச்சரிசி, தேங்காய், பழம் வைத்து மலர்களை துாவி தீபம் ஏற்றி வைத்து திருப்புகழ் பாடி ஒவ்வொரு படியாக பூஜை செய்தனர். கோவிலில் உள்ள, 55 படிகளுக்கு திருப்படி பூஜை நடைபெற்றது. இதை மருதநாயகம் தொடங்கி வைத்தார். திருப்புகழ் இசை நிகழ்ச்சி உடுமலைபேட்டை உமாநந்தினி பாலகிருஷ்ணன் குழுவினரால் நடத்தப்பட்டது. பின், ஸ்வாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.