ADDED : ஆக 15, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம், இன்று நடக்கிறது என கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில், 157 கிராம பஞ்சாயத்துகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது. இதில், பஞ்., நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை, துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.