/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபட் - கார் மோதல் பாட்டி, பேத்தி உயிரிழப்பு
/
மொபட் - கார் மோதல் பாட்டி, பேத்தி உயிரிழப்பு
ADDED : ஆக 17, 2025 02:30 AM
அரவக்குறிச்சி:மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்தவர் மருதராஜ், 60. இவரது மனைவி புஷ்பா, 55. பேத்தி சஷ்டியா தேவி, 3. இவர்கள் மூவரும் நேற்று, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மாலப்பட்டியில் உள்ள, கம்பானித்தாத்தன் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர். பின், மதியம், 2:30 மணிக்கு மீண்டும் வாடிப் பட்டியை நோக்கி மொபட்டில் சென்றனர்.
அரவக்குறிச்சியில் உள்ள, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார், மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே படுகாயங்களுடன் குழந்தை சஷ்டியா தேவி, பாட்டி புஷ்பா உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தாத்தா மருதராஜ் படுகாயமடைந்தார்.
அவர், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரூர் போலீசார், தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாலமுருகன், 36, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.