/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
/
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : பிப் 09, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:: கரூர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்-வாளர் கார்த்திக், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் தர-கம்பட்டி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி தணிக்கை செய்தார். அதில், செங்காட்டூர் கருப்-பையா காட்டில், பட்டா நிலத்தில் உரிய அனுமதி சீட்டு இன்றி, இரண்டு யூனிட் கிராவல் மண் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து, தனி வருவாய் ஆய்வாளர் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, ஆதனுார் பஞ்,. சென்னம்பட்டியை சேர்ந்த செல்வராஜ், 35, என்ப-வரை கைது செய்தனர்.