ADDED : அக் 03, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம். கரூர் மாவட்டம் கம்பளியம்பட்டி சேர்ந்த நாகராஜ் மனைவி ராஜகுமாரி, 32; தாராபுரம் வந்த கணவன், மனைவி இடையே, கடந்த மாதம், 30ல் வாக்குவாதம் ஏற்பட்டது.
குடிபோதையில் இருந்த நாகராஜ் கட்டையால் தாக்கியதில் ராஜகுமாரி பலியானார். தப்பிய நாகராஜை தாராபுரம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கம்பளியம்பட்டியில் நேற்று முன்தினம் மாலை நாகராஜை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.