கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் ஐ.ஜி., - டி.ஐ.ஜி., ஆய்வு
கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் ஐ.ஜி., - டி.ஐ.ஜி., ஆய்வு
ADDED : நவ 18, 2026 07:18 AM
கரூர்:கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், மத்திய மண்டல ஐ.ஜி., மற்றும் திருச்சி சரக டி.ஐ.ஜி., அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
காலியாக உள்ள, கரூர் சட்டசபை
தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இடைத்தேர்தலையொட்டி, முதல்வர் விஜய், கரூரில் அரசு நிகழ்ச்சி மற்றும்
ரோடு ேஷாவில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து
வருகிறது.
இந்நிலையில், நேற்று கரூர் எஸ்.பி., அலுவலகத்தில்
குற்றப்பிரிவு, குற்ற ஆவண காப்பக பிரிவு, குழந்தை கடத்தல் தடுப்பு
பிரிவு, கைரேகை பிரிவு, மோப்ப நாய் பிரிவு, மனித உரிமை பிரிவு உள்ளிட்ட
பல்வேறு பிரிவுகளில், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.,
பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதில், குற்ற வழக்கு பதிவு
செய்யப்பட்ட விபரம், தண்டனை விபரம், நீதிமன்றத்தில் நடந்து வரும்
வழக்கு குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிறகு, நிலுவையில் உள்ள
வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், முதல்வர் விஜய் கரூர் வரும்
பட்சத்தில், அனைத்து பிரிவுகளிலும் கோப்புகள் தயார் நிலையில் இருக்க
வேண்டும் என, போலீசாருக்கு ஐ.ஜி., பாலகிருஷ்ணன் அறிவுரை
வழங்கியுள்ளார்.
அதேபோல், நேற்று முன்தினம் திருச்சி சரக டி.ஐ.ஜி.,
சிபி சக்கரவர்த்தி, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் துறை வாரியாக,
ஆய்வு மேற் கொண்டு பல்வேறு ஆலோசனை தெரிவித்துள்ளார். இதனால், கரூரில்
இடைத்தேர்தல் தொடர்பான பணி, களை கட்ட தொடங்கியுள்ளது.
