/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்த நிலையில் பூங்கா சட்ட விரோத செயல்கள் அதிகரிப்
/
சேதமடைந்த நிலையில் பூங்கா சட்ட விரோத செயல்கள் அதிகரிப்
சேதமடைந்த நிலையில் பூங்கா சட்ட விரோத செயல்கள் அதிகரிப்
சேதமடைந்த நிலையில் பூங்கா சட்ட விரோத செயல்கள் அதிகரிப்
ADDED : அக் 20, 2024 01:25 AM
சேதமடைந்த நிலையில் பூங்கா
சட்ட விரோத செயல்கள் அதிகரிப்பு
கரூர், அக். 20-
கரூர் அருகே, புதிதாக திறக்கப்பட்ட பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் சட்ட விரோத செயல்கள் நடக்கிறது.
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து, பெரிய ஆண்டாங்கோவிலில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, பல லட்ச ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. அதில், அம்மா உடற்பயிற்சி கூடம், நடை பயிற்சி மேற்கொள்ள எட்டு வடிவில் தளம், பூங்காவை சுற்றி நடை பயிற்சி தளம், கழிப்பிடம், சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பூங்கா பராமரிப்பு இல்லாமல், முட்புதர்கள் அதிகளவில் முளைத்துள்ளது. விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. கழிப்பிடமும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் பூங்காவுக்கு செல்ல தயங்குகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் பூங்காவுக்குள் நடக்கிறது. எனவே, பூங்காவை சீரமைத்து, சேதமடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை மாற்றி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.