/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விஸ்வ ஹிந்து சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
/
விஸ்வ ஹிந்து சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 08, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், மனோகரா கார்னரில் நேற்று நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
குமரன் பஸ் சர்வீஸ் உரிமையாளர் செல்வம், நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். பிறகு, பொதுமக்களுக்கு தண்ணீர், நீர் மோர் ஆகியவை வழங்கப்பட்டது. விழாவில், மாநில சேவா நிர்வாகி பாலு, திருப்பூர் மண்டல செயலாளர் விஜய், மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் கொங்குவேள் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

