/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு திறப்பு
/
அரசு நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு திறப்பு
ADDED : ஜன 03, 2024 12:46 PM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் வகுப்பு திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். இதில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவ மாணவிகள் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை திறக்கப்பட்டது.
இதன் மூலம், மாணவர்கள் எளிதில் பல கருத்துகள் தெரிந்து கொண்டு படிக்கும் வகையில் வகுப்பறை திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் காமாட்சி, மணிவண்ணன், கிருஷ்ணராயபுரம் வட்டார தொடக்க கல்வி அலுவலர்கள் மீனா, செந்தில்குமாரி, கிருஷ்ணராயபுரம் நகர தி.மு.க., செயலாளர் சசிக்குமார், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா மற்றும் ஆசிரியர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* கோவக்குளம், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிய ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவு திட்டத்திற்கு கட்டப்பட்ட புதிய கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.
எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தலைமை வகித்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவு திட்டம் சார்பில் உணவு தயாரிக்கும் புதிய உணவுக்கூடம் கட்டடத்தை திறந்து வைத்தார். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, ஆசிரியர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.