/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ADDED : செப் 14, 2024 07:06 AM
கரூர்: மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 21 ஆயிரத்து, 737 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 22 ஆயிரத்து, 72 கன அடியாக அதிகரித்தது. காவிரியாற்றில் சம்பா சாகுபடிக்காக, 20 ஆயிரத்து, 652 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தென்கரை பாசன வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால் உள்ளிட்ட, நான்கு வாய்க்கால்களில் வினாடிக்கு, 1,420 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 636 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 388 அடியாக குறைந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 89.41 அடியாக இருந்தது.* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.71 அடியாக உள்ளது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 88 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

