/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க அறிவுறுத்தல்
/
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 18, 2025 01:21 AM
ஈரோடு, தீபாவளி பண்டிகையின்போது, பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க, ஈரோடு கலெக்டர் கந்தசாமி கேட்டு கொண்டார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தீபாவளியின்போது விளக்கேற்றுதல், பட்டாசு வெடித்தல், வீடுகளில் மின் விளக்களால் அலங்காரம் செய்தலின்போது பொறுப்புடன் கையாள வேண்டும். தனி நபர்கள், சொத்துக்கள், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடாது. திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும்.
தீப்பிடிக்க வாய்ப்பில்லாத, தளர்வான ஆடை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, 1 மீட்டர் துாரம் தள்ளி நிற்க வேண்டும். தண்ணீர் வாளி, போர்வைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை கையில் கொளுத்தக்கூடாது. தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.