/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடவூர் யூனியன் சாதாரண கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
கடவூர் யூனியன் சாதாரண கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கடவூர் யூனியன் சாதாரண கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கடவூர் யூனியன் சாதாரண கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : அக் 17, 2024 03:07 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் சாதாரண கூட்டம் யூனியன் குழு தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. யூனியன் குழு துணை தலைவர் கைலாசம், கமிஷனர் சுரேஷ்-குமார், பொறியாளர்கள் கிருஷ்ணன், பெரியசாமி ஆகியோர் முன்-னிலை வகித்தனர். யூனியன் அலுவலர் பன்னீர்செல்வம் வரவு, செலவு மற்றும் வளர்ச்சி பணிகள் உள்பட, 19 தீர்மானங்களை வாசித்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர் ராமமூர்த்தி பேசுகையில்,''மாவத்துார் பஞ்., மசாலுார் பகுதியில் நடந்து வரும் பைப்லைன் விஸ்தரிப்பு பணிகள் மற்றும் ரெட்டியப்பட்டி கடைவீதி பகுதியில், கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு சரியான திட்ட மதிப்பீடுகள் செய்-யாமல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.இதற்கு பதிலளித்த குழு தலைவர் செல்வராஜ், ''பொறியாளர்-களை கொண்டு, திட்ட மதிப்பீடுகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் புதிய அங்கன்வாடி மற்றும் பயணியர் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். கவுன்சிலர்கள் தவமணி, ரவிசந்திரன், மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

