/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காஞ்சி நகர் பாம்பாளாயி அம்மன் கோவில் விழா
/
காஞ்சி நகர் பாம்பாளாயி அம்மன் கோவில் விழா
ADDED : மே 31, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, காஞ்சிநகர் பாம்பாளாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை காஞ்சி நகர் பகுதியில் பாம்பாளாயி அம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை, 10:30 மணிக்கு லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். ஜூன் 1ல் அம்மன் கோவிலில் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மா விளக்கு பூஜை, அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. திரளானோர் கலந்து கொண்டனர்.