நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில்,
பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம்
பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு திருவிழா, நேற்று முன்தினம்
இரவு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வரும், 25ல் பொங்கல் வைத்தல், 26ல்
பூமிதி விழா, 27ல் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை
கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

