தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அடிப்படை வசதி செய்து தரக்கோரி கற்பகம் நகர் குடியிருப்போர் மனு

அடிப்படை வசதி செய்து தரக்கோரி கற்பகம் நகர் குடியிருப்போர் மனு

அடிப்படை வசதி செய்து தரக்கோரி கற்பகம் நகர் குடியிருப்போர் மனு


ADDED : ஜூலை 28, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, மணவாடியில் உள்ள கற்பகம் நகர் குடியி-ருப்போர் நலச்சங்கத்தினர், கரூர் கலெக்டர் அலு-வலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: மணவாடி பஞ்.,க்குட்-பட்ட கற்பகம்நகர், ஜோதி நகரில், 200க்கும் மேற்-பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, குடிநீர் தேவைக்கு போர்வெல் மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. தற்போது வறட்சி காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. பல கி.மீ., துாரம் சென்றோ அல்லது காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டி நிலையில் உள்ளனர். தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்-டிகள் சிரமப்படுகின்றனர். குறைந்த மின்னழுத்த வினியோகம் காரணமாக, வீட்டில் மின் சாத-னங்கள் பழுதடைந்து விடுகிறது. வீடுகளில் இரவு நேரத்தில் விளக்குகள் சரியாக எரிவது கிடையாது. இந்த பகுதியில் குப்பை அள்ள துாய்மை பணியாளர்கள் வருவது இல்லை. இப்ப-குதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நட-வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்-டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us