ADDED : நவ 21, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
அருகே, திருக்காம்புலியூர் ரவுண்டானா முதல், கோவை மற்றும் ஈரோடு
சாலையில் எஸ்.பி., ரகுபதி, நேற்று மாலை பொதுமக்களை சந்தித்தார்.
அப்போது, போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல், வெளியூர்
செல்லும்போது வீடுகளை பூட்டி விட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு முறையான
தகவல் அளித்தல், தனியாக வசிக்கும் முதியோருக்கு பாதுகாப்பு அளிப்பது
குறித்து விழிப்புணர்வு குறித்து விளக்கமளித்து பேசினார்.
பின்,
'மக்களுடன் காவல் துறை' என்ற தலைப்பில், போலீஸ் ஸ்டேஷன் தொடர்பு எண்
குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரமும், வீடுகளில் ஒட்டப்பட்டது.
அப்போது, கரூர் டவுன் டி.எஸ்.பி., ராஜராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர்
செந்தில் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
