ADDED : நவ 21, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே, சாலையில் கழிவு நீர் ஆறாக ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கரூர்
மாநகராட்சி, பெரிய குளத்துப்பாளையம் பகுதியில், அரசு பள்ளி,
கோவில், படிப்பகம் குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அப்பகுதியில்
உள்ள, பாதாள சாக்கடை மூடியில் இருந்து, கழிவுநீர், நேற்று காலை வெளியேறி
சாலையில் ஓடியது. அப்போது, துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியில்
உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம்
ஏற்பட்டது.
