/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அப்பிபாளையம் பஞ்.,ல் மே தின கிராம சபை கூட்டம்
/
கரூர் அப்பிபாளையம் பஞ்.,ல் மே தின கிராம சபை கூட்டம்
கரூர் அப்பிபாளையம் பஞ்.,ல் மே தின கிராம சபை கூட்டம்
கரூர் அப்பிபாளையம் பஞ்.,ல் மே தின கிராம சபை கூட்டம்
ADDED : மே 02, 2025 01:52 AM
கரூர்:
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், அப்பிபாளையம் பஞ்., தேத்தம்பட்டியில், மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:
அப்பிபாளையம் கிராமத்தில் மட்டும், 72 வளர்ச்சி திட்டப்பணிகள், 1.78 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. ஆட்சேபனை இல்லா புறம்போக்கு நிலங்களின் வகைபாடுகளை மாற்றி, பொதுமக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் கட்டட அனுமதி வழங்குவதற்காக, ஒற்றைச்சாளர முறையில் கணினியின் மூலம் பதிவு செய்து அனுமதி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், உங்களின் வீட்டு வரிகளை நீங்கள் கணினி வழியில் செலுத்திக் கொள்ளலாம். பெண்கள் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புக்கான பரிசோதனையை செய்து, தங்களை காத்துக் கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில், பெயரை பதிவு செய்து தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் கரூர் எம்.பி., ஜோதிமணி, டி.ஆர்.ஓ., கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ் செல்வன், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கருப்பத்தூர் பஞ்சாயத்து கிராம சபை கூட்டம், வரகூர் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து கூறப்பட்டது. மேலும், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத பஞ்சாயத்து என அறிவித்தல் பற்றி எடுத்து கூறப்பட்டது. பஞ்சாயத்து செயலாளர் சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* இதே போல் சிவாயம், பிள்ளபாளையம், வயலுார், மகாதானபுரம், மணவாசி, மாயனுார், வீரியபாளையம், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, கம்மநல்லுார், திருக்காம்புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.