/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெளியூருக்கு புறப்பட்ட மக்கள் களை கட்டிய கரூர் பஸ் ஸ்டாண்ட்
/
வெளியூருக்கு புறப்பட்ட மக்கள் களை கட்டிய கரூர் பஸ் ஸ்டாண்ட்
வெளியூருக்கு புறப்பட்ட மக்கள் களை கட்டிய கரூர் பஸ் ஸ்டாண்ட்
வெளியூருக்கு புறப்பட்ட மக்கள் களை கட்டிய கரூர் பஸ் ஸ்டாண்ட்
ADDED : செப் 28, 2025 08:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி, பொதுமக்கள் நேற்று வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இதனால், நேற்று காலை கரூர் பஸ் ஸ்டாண்டில், கூட்டம் களை கட்டியது.
தமிழகம் முழுவதும், பள்ளிகளில் காலாண்டு தேர்வு நிறைவு பெற்ற நிலையில், நேற்று முன்தினம் முதல் வரும், 6 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதில் ஆயுதபூஜை, விஜயதசமி விழா விடுமுறையும் அடங்கும். இதையடுத்து, பொது மக்கள் நேற்று வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை பொதுமக்கள், மாணவ, மாணவியர் கூட்டம் நிரம்பி வழிந்தது.