/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் பலியானது விபத்து கரூர் துணை மேயர் தன்னிலை விளக்கம்
/
த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் பலியானது விபத்து கரூர் துணை மேயர் தன்னிலை விளக்கம்
த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் பலியானது விபத்து கரூர் துணை மேயர் தன்னிலை விளக்கம்
த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் பலியானது விபத்து கரூர் துணை மேயர் தன்னிலை விளக்கம்
ADDED : செப் 30, 2025 01:32 AM
கரூர், கரூர் த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது விபத்து என, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், தி.மு.க., தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரணவன், இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் பேசியதாவது: கரூரில் மிகப்பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்தவுடன், தனியார் மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி எப்படி வந்தார் என சிலர் கேட்கின்றனர். நான், செந்தில்பாலாஜி, ஒன்றிய செயலர்கள், பகுதி செயலர்கள், 27ம் தேதி இரவு, 7:00 கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் பேசிக்கொண்டு இருந்தோம். இரவு, 7:30 மணிக்கு செந்தில்பாலாஜிக்கு வந்த போன் காலில், விஜய் கூட்டத்தில் மயக்கமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வருகின்றனர் என தகவல் கிடைத்தது. தி.மு.க., அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை செல்ல, 5 நிமிடம் போதும். மிக விரைவாக சென்று, அங்கு வந்து கொண்டிருந்த நோயாளிகளை, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தோம்.
உடனடியாக டாக்டர்களை வரவழைத்து, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தான் உண்மை. சிலர், எப்படி திடீரென செந்தில்பாலாஜி மருத்துவமனைக்கு வந்தார் என்று கேட்கின்றனர். பின் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சென்று, சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். முதல்வர் ஸ்டாலின் அதிகாலை, 3:15 மணிக்கு வந்தார். அன்று இரவு முழுதும் கண்விழித்து இருந்தார். த.வெ.க., நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, எங்கள் மீது பழி சொல்கிறார். த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மருத்துவமனை பக்கம் கூட வரவில்லை. இந்த பழி சொல் மக்கள் மத்தியில் எடுபடாது.
இவ்வாறு, பேசியுள்ளார்.