/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் எம்.குமாரசாமி கல்லூரி - என்.ஐ.டி., ஜப்பான் மாணவர்கள் பரிமாற்ற நிகழ்ச்சி

ADDED : மார் 11, 2024 01:50 AM
கரூர்:கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், ஜப்பான் அரசின் சகுரா அறிவியல் பரிமாற்ற திட்டத்தில், மாணவர்கள் பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், கல்லுாரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிப்பான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஜப்பான் தகவல் அமைப்பு துறை திட்ட மேலாளர் கசுகிறோ ஈசி, உலகளாவிய கல்வி ஊக்குவிப்பு மற்றும் நிறுவன திட்டமிடல் துறை மேலாளர் டோரு எமர்ஷிதா, இயந்திரவியல் துறை இணை பேராசிரியர் டக்கு யு கூவஹாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், எம்.குமாரசாமி கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சி திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றை, ஜப்பான் பிரதிநிதிகள் பார்வையிட்டு பாராட்டினர். இதன் மூலம் என்.ஐ.டி., ஜப்பான் பிரதிநிதிகள் மற்றும் எம்.கே.சி.இ., அணிகள் இருவரும் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை வளர்ப்பதிலும் எதிர்காலத்தில் கூட்டு முயற்சிகளை ஆராய திட்டமிட்டுள்ளனர். நிர்வாக இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன், வெளிநாட்டு மொழிகளுக்கான மைய ஒருங்கிணைப்பாளர்- தினேஷ்குமார், தலைமை வழிகாட்டி அசோக் சங்கர், உள்பட பலர் பங்கேற்றனர்.-