ADDED : நவ 05, 2026 07:04 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் புதிய எஸ்.பி.,யாக ரகுபதி நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
கரூர் எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ஹரி கிரண் பிரசாத் கடந்த அக்., 29ல், இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக, சென்னைதாம்பரம்
பள்ளிக்கரனை துணை கமிஷனராக பணியாற்றிய ரகுபதி, கரூர் புதிய
எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கரூர் எஸ்.பி.,
அலுவலகத்தில், 36வது எஸ்.பி.,யாக நேற்று ரகுபதி பொறுப்பேற்றுகொண்டார்.
கரூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் எஸ்.பி., அலுவலக அமைச்சு பணியாளர்கள், புதிய
எஸ்.பி., ரகுபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
