/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு 13,828 நாட்களுக்கு பின் ஓய்வு
/
கரூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு 13,828 நாட்களுக்கு பின் ஓய்வு
கரூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு 13,828 நாட்களுக்கு பின் ஓய்வு
கரூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு 13,828 நாட்களுக்கு பின் ஓய்வு
ADDED : அக் 08, 2025 01:33 AM
கரூர், கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததால், 13,828 நாட்களுக்கு பின் கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் ஓய்வு பெற்றது.
கரூரில் உழவர் சந்தை பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. கடந்த 1987, நவ.27-ல் கரூர் முத்துக்குமாரசாமி பஸ் ஸ்டாண்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், கரூரில் கொசுவலை உற்பத்தி, டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள், பஸ் பாடிகட்டும் தொழில் போன்றவை பிரதானமாக விளங்குகிறது.
இதன் மூலம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, தொழில் நிறுவனங்களுக்கு சென்று திரும்புகின்றனர். திருச்சி, கோவை, சேலம், தென்மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இது தவிர, தொழில் நிறுவனங்கள் சார்பிலும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து வாகனங்களும், ஒரே பகுதியில் சந்திக்கும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், பயணிகள் மட்டுமன்றி நகருக்குள் வரும் மக்களும் சிரமப்பட்டனர். ஆனால், 1995ம் ஆண்டு கரூர் மாவட்டம் உதயமானது தொடர்ந்து, 1996ம் ஆண்டு தான்தோன்றிமலையில், புதிய கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், மாவட்ட எஸ்.பி., அலுவலகம் என, படிப்படியாக அனைத்து துறை அலுவலகங்களும் திறக்கப்பட்டன.
1996ம் ஆண்டு முதல் கரூர் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற செய்ய வேண்டும் வலியுறுத்தப்பட்டது. கடந்த, 2010ம் ஆண்டு முதல் தோரணகல்பட்டி, திருமாநிலையூர் என்று இடங்கள் மாறி, மாறி அறிவித்து பஸ் ஸ்டாண்ட் அமைப்பதில் இழுப்பறி நீடித்து வந்தது. பல்வேறு நீதிமன்ற வழக்கு முடிந்து கரூர் மாநராட்சிக்குப்பட்ட திருமாநிலையூரில், 12.14 ஏக்கரில் புதிய பஸ் ஸ்டாண்ட்டை, ஜூலை 9ல், துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். நேற்று முன்தினம் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
கரூர் முத்துக்குமாரசாமி பஸ் ஸ்டாண்ட், 13,828 நாட்கள் (37ஆண்டு, 10 மாதம்) பின் ஓய்வு பெற்றது. இங்கு, டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால், எப்போது போல பர
பரப்பு இல்லை. இரவு, 10.00 மணிக்கு மேல் டவுன் பஸ் இயக்காது என்பதால் பழைய பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.