ADDED : அக் 24, 2024 01:16 AM
கரூர், அக். 24-
கரூர் மாவட்டத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில், கரூர் வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் குறு வட்ட அளவிலான கோகோ போட்டியில் இரண்டாம் இடம், கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர்.
குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள், 3,000 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், 200 மீட்டர், 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம், குண்டு எறிதல், தட்டெறிதல் போட்டிகளில் முதலிடம், உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடம், மேசை பந்து போட்டியில் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதியும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில், 3,000 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடம், குண்டு எறிதலில் மூன்றாம் இடமும் பெற்று மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் போட்டியில், மாணவன் கனகவேல் மூன்றிலும் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த, மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு தங்கப்பதக்கம், 10 வெண்கல பதக்கம் வென்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, பள்ளி தாளாளர் பாலு குருசுவாமி ஆகியோர் பாராட்டி பரிசு
வழங்கினர்.
பள்ளி முதல்வர் சுரேஷ், துணை முதல்வர் தவமணி, ஒருங்கிணைப்பாளர்கள் காயத்ரி செல்வரசி, விவேக், கவிதா, கீதா, உடற்கல்வி ஆசிரியர் அறிவழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.