/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கி.புரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
/
கி.புரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
ADDED : டிச 31, 2025 06:13 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம், டவுன் பஞ்., வளாகத்தில் நடந்தது. கூட்-டத்திற்கு, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., தலைவர் சேதுமணி தலைமை வகித்தார்.
இதில், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., துாய்மை பணியா-ளர்களுக்கு, ஓராண்டுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. கோவக்குளம் பகுதியில் உள்ள பூங்கா பராமரிப்பு பணியை, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு, ஓராண்-டுக்கு வழங்க ஒப்புதல் வழங்குதல், கிருஷ்ணரா-யபுரம் டவுன் பஞ்., பஸ் ஸ்டாப்பில், அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல, அரசு போக்குவ-ரத்து கழக மேலாளர்களுக்கு கடிதம் அனுப்புதல், மஞ்சமேடு திடக்களம் வாய்க்காலில் இருந்து மஞ்சமேடு முதல் உள்ள மண்பாதை, மழைக்கா-லங்களில் சோறும், சகதியுமாக மாறி விடுவதால், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
அதனால், சாலைகளை தரம் உயர்த்தும் வகையில், பட்டா நிலம் தரும் பட்சத்தில், புதிய தார் சாலையாக மற்ற நடவடிக்கை எடுப்பது உள்-ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

