/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ணர் - ராதை ஊர்வலம்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ணர் - ராதை ஊர்வலம்
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ணர் - ராதை ஊர்வலம்
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ணர் - ராதை ஊர்வலம்
ADDED : ஆக 17, 2025 01:47 AM
கரூர், கரூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கிருஷ்ணர் - ராதை வேடமிட்ட குழந்தைகளின் ஊர்வலம் நேற்று நடந்தது.
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கோ-பூஜை நடத்தப்பட்டது. பிறகு, தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, மனோகரா கார்னர் ஜி.ஆர். மண்டபத்தை அடைந்தது. கிருஷ்ணர் - ராதை வேடமிட்டு ஊர்வலத்தில் சென்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாநில சேவாதள பொறுப்பாளர் பாலசுப்பிரமணி, கோட்ட செயலாளர் விஜய், மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் கொங்குவேல், முன்னாள் பா.ஜ., மாவட்ட செய்தி தொடர்பாளர் மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.