/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,ல் சாதாரண கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,ல் சாதாரண கூட்டம்
ADDED : மார் 29, 2025 07:12 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், இரண்டாம் நிலை டவுன் பஞ்சாயத்து சாதா-ரண கூட்டம் பஞ்சாயத்து வளாகத்தில் நடந்தது.
டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். துாய்மை இந்தியா திட்டம்-2.0 திட்டத்தின் கீழ், டவுன் பஞ்சா-யத்து கசடு மற்றும் கழிவு நீர் அகற்றும் வாகனம் கொள்முதல் செய்வது, புதிதாக மின்கல வாகனம் வாங்குதல், அரசவள்ளி தெருவில் சிறுபாலம் அமைத்தல், வார்டு எண் 1, 2, 3, 5, 9, 10, 11 என தென்கரை வாய்க்காலில் உள்ள படித்துறைகளை புதிதா-கவும் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் மன்-றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.வார்டு எண் 9ல், பிச்சம்பட்டி தெற்கு தெரு நத்தம் புறம்போக்கு நிலத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பழமையான புளிய-மரம், கோவக்குளம் பகுதியில் உள்ள புளியமரம், கூட்டுறவு அங்காடி எதிரில் உள்ள புளியமரம் ஆகிய மரங்களை அகற்றுவ-தற்கு கிருஷ்ணராயபுரம் தாலுகா நிர்வாகத்திற்கு கடிதம் வழங்-குதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் துணைத் தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் ருக்கு-மணி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.