/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை நகராட்சி அவசர கூட்டம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
குளித்தலை நகராட்சி அவசர கூட்டம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றம்
குளித்தலை நகராட்சி அவசர கூட்டம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றம்
குளித்தலை நகராட்சி அவசர கூட்டம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : மே 08, 2025 01:24 AM
குளித்தலை,
குளித்தலை நகராட்சி கூட்டரங்கில் நேற்று அவசர கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன், நகராட்சி கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி மேலாளர் தேவராஜன் தீர்மானங்களை வாசித்தார்.
இக்கூட்டத்தில், உழவர் சந்தை அருகில் உள்ள கலப்பு காலனியில், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் அமைத்தல், மலையப்பன் நகர் மற்றும் மணத்தட்டையில் சமுதாயம் மேடை
அமைத்தல், காவிரி நகரில் நுழைவாயில் அமைத்தல், மணத்தட்டையில் சமுதாயக்கூடம், பள்ளிவாசல் மற்றும் அண்ணா நகரில் வடிகால் பணி, நாப்பாளையத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி வளாகத்தில் பேவர் பிளாக் அமைப்பது, நகராட்சி பஸ் ஸ்டாண்டில் உயர்மின் கோபுரம் மற்றும் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட, 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.