/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலமுருகன் கோவிலில் கும்பாபிேஷக விழா
/
பாலமுருகன் கோவிலில் கும்பாபிேஷக விழா
ADDED : நவ 22, 2024 01:42 AM
பாலமுருகன் கோவிலில்
கும்பாபிேஷக விழா
நாமக்கல், நவ. 22-
நாமக்கல், டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே ராமசாமி தெருவில் அமைந்துள்ள, விநாயகர், துர்க்கை அம்மன், இடும்பன், பாலமுருகன் கோவில் கும்பாபி ேஷக விழா நேற்று நடந்தது.
அதை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ேஹாமமும், தொடர்ந்து மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அன்று மாலை, முதல் கால யாக பூஜை, இரவு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், கோபுர கலச பூஜை நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு கடம் புறப்பாடு, 7:30 மணிக்கு விநாயகர், துர்க்கை அம்மன், இடும்பன், பாலமுருகன் ஆலய கோபுரங்களுக்கு கும்பாபி ேஷகம் நடந்தது. பின் தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம்
வழங்கப்பட்டது.