ADDED : பிப் 15, 2024 04:45 PM
கரூர் : அரவக்குறிச்சி அருகே, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட, இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்த ராதிகா, 37, என்பவரிடம் ஒன்பதரை பவுன் தங்க செயினை பறித்து, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி பக்ருதீன், 30, அஸ்வந்த், 30, உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பக்ருதீன், அஸ்வந்த் ஆகிய இரண்டு பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, கலெக்டர் தங்கவேலுக்கு, எஸ்.பி., பிரபாகர் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் உத்தரவுபடி பக்ருதீன், அஸ்வந்த் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அதற்கான நகல், திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் வழங்ககப்பட்டது.

