ADDED : நவ 03, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் அருகே, மாடு முட்டியதில் விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
க்ஷகரூர் மாவட்டம், சங்கரமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து, 60; இவர் கடந்த, 29ல் கே.பி.குளத்தில் உள்ள, ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடு, தங்கமுத்துவை முட்டி தள்ளியது. அதில், இடுப்பு மற்றும் காது பகுதியில் படுகாயம் அடைந்த தங்கமுத்து, திருச்சி அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, தங்கமுத்துவின் மகன் தர்மராஜ், 34; போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசா-ரிக்கின்றனர்.
