/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை சாலையில் மழைநீர் தேங்கியதால் அவதி
/
லாலாப்பேட்டை சாலையில் மழைநீர் தேங்கியதால் அவதி
ADDED : அக் 16, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, பழைய நெடுஞ்சாலை விட்டுக்கட்டி அருகில், மழைநீர் தேங்கியதால், மக்கள் அவதிப்பட்டனர்.
திருச்சி பழைய நெடுஞ்சாலை அருகே, லாலாப்பேட்டை விட்டுக்கட்டி கடைவீதி உள்ளது. இந்த சாலையில், மழைநீர் அதிகமாக தேங்கி வருகிறது. நேற்று காலை முதல் லேசான மழை பெய்தது. மழைநீர் வடிந்து செல்ல போதுமான வடிகால் வசதி இல்லாததால், சாலையோர இடங்களில் தேங்கி வருகிறது.
சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஆகையால் பஞ்சாயத்து நிர்வாகம், நிரந்தரமாக இந்த சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில், புதிய வடிகால் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.