/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
/
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
ADDED : ஜூன் 30, 2024 01:36 AM
கரூர், அரவக்குறிச்சி அருகே, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே இனுங்கனுார் பகுதியில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான, 14 ஏக்கர், 55 சென்ட் நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. அவற்றின் மதிப்பு, ஒரு கோடி ரூபாய். அதை, கரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு மற்றும் அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தின் நிறைவேற்ற உத்தரவு படி, அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தி, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் என, பிளக்ஸ் போர்டு வைத்தனர்.
அப்போது, அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், கோவில் செயல் அலுவலர் சரவணன், தாசில்தார் சத்தியமூர்த்தி, ஆர்.ஐ., சக்கரவர்த்தி மற்றும் நீதிமன்ற அமீனா ஆகியோர் உடனிருந்தனர்.