/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சலவை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்
/
சலவை தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 19, 2024 02:10 AM
கரூர்: கரூர் மாவட்ட சலவை தொழிலாளர் சங்கம், வெங்கமேடு கிளை சார்பில், மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமையில், மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகத்தில் உள்ள சலவை தொழிலாளர்களை, எஸ்.சி., பட்டி-யலில் சேர்க்க வேண்டும். பட்டியலில் சேர்க்கும் வரை, சலவை தொழிலாளர்களுக்கு, 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். சலவை தொழிலாளர்களுக்கு வங்கியில் மான்யத்-துடன் கடன் வழங்க வேண்டும். வீடுகள் இல்லாத சலவை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு-மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செய-லாளர் தமிழ் செல்வன், பொருளாளர் ராமச்சந்திரன், வெங்கமேடு கிளை சங்க தலைவர் பெரிய சாமி, துணைத்தலைவர்கள் பிச்சை-முத்து, மணி, செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் முனீஸ்-வரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.

