/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் பஞ்., அலுவலகம் முன் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
/
மாயனுார் பஞ்., அலுவலகம் முன் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
மாயனுார் பஞ்., அலுவலகம் முன் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
மாயனுார் பஞ்., அலுவலகம் முன் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
ADDED : டிச 11, 2025 06:25 AM
கிருஷ்ணராயபுரம்: மாயனுார் பஞ்சாயத்து அலுவலகம் முன், ஐக்கிய விவசாயி
கள் முன்னணி சார்பில், மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்ர
மணியன் தலைமை வகித்தார்.
மத்திய அரசு விவசாயிகள் சட்டம் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிய இரண்டு புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். விளை பொருட்களுக்கு பெரிய நிறுவனங்கள் விலை நிர்-ணயம் செய்யும். இதன் மூலம் உற்பத்தி செய்யும் விவசாயிக-ளுக்கு உரிய வருமானத்துக்கு தடை ஏற்படுகிறது. மின்சார திருத்த சட்டம் மூலம், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்-படும். எனவே, இந்த இரண்டு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, சட்ட நகல் ஏரிப்பு போராட்டம்
நடந்தது.
சட்ட நகல் எரிக்க முன்றவர்களை, மாயனுார் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், விவசாயிகள் சங்க மாவட்ட செய-லாளர் ராஜூ, மாவட்ட தலைவர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

