sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பயணிகள் நிழற்கூடம் சேதம் அச்சத்தில் பொதுமக்கள்

/

பயணிகள் நிழற்கூடம் சேதம் அச்சத்தில் பொதுமக்கள்

பயணிகள் நிழற்கூடம் சேதம் அச்சத்தில் பொதுமக்கள்

பயணிகள் நிழற்கூடம் சேதம் அச்சத்தில் பொதுமக்கள்


ADDED : டிச 11, 2025 06:24 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள, நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் பஞ்சாயத்து யூனியன், நெரூர் தெற்கு பஞ்., அரங்கநாதன் பேட்டையில் கடந்த, 2013-14ல் பயணிகள் நிழற்கூடம் கட்டப்-பட்டது. அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நி-லையில், நிழற்கூடத்தின் சுவர்கள் சேதமடைந்துள்ளது. பயணிகள் உட்கார இருக்கைகள் இல்லை. அதை முழுமையாக, பஞ்., நிர்-வாகத்தினர் சீரமைக்காமல் விட்டுள்ளனர். தற்போது, மழை பெய்து வரும் நிலையில், நிழற்கூடம் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, அரங்கநாதன் பேட்டையில் உள்ள, நிழற்கூ-டத்தை உடனடியாக சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us