/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 43.84 கோடி ரூபாய் வைப்பு தொகை
/
மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 43.84 கோடி ரூபாய் வைப்பு தொகை
மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 43.84 கோடி ரூபாய் வைப்பு தொகை
மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 43.84 கோடி ரூபாய் வைப்பு தொகை
ADDED : டிச 11, 2025 06:25 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், 43.84 கோடி ரூபாய் வைப்புத்தொகை உரிமை கோரப்படாமல் உள்ளது.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து, உரிமை கோரப்ப-டாத வைப்பு தொகை தீர்வு முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., விமல்ராஜ் தலைமை வகித்தார். முகாமில், பயனாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சரியான ஆவணங்களை ஆய்வு செய்து, 25 பய-னாளிகளுக்கு, 17.28 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைப்புத் தொகை வழங்கப்பட்டது. மாவட்டத்தில், 2 லட்சத்து, 28 ஆயி-ரத்து, 505 உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள் உள்ளன. அதில், 43.84 கோடி ரூபாய் வைப்பு தொகை உள்ளது. இதுவரை தீர்வு செய்யப்பட்ட, 172 கணக்குகளில், 42.64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.வைப்புத் தொகை உரிமை கோரப்படாத நிலையில் உள்ளதா என்பதை, இந்திய ரிசர்வ் வங்கியின் www.udgam.rbi.org.in இணை-யதளத்தின் மூலம் அல்லது நேரடியாக வங்கிகள், காப்பீட்டு நிறு-வனங்களை அணுகி சரிபார்த்து பெறலாம். டிச.,31 வரை முகாம் நடப்பதால் வைப்புதாரர்கள் அல்லது இறந்த வைப்புதாரர்களின் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் அல்லது இறந்த வைப்பு
தாரர்களின் வாரிசுதாரர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்க-ளுக்கு தேவையான ஆதாரங்களை சமர்ப்பித்து, உரிமை கோரப்ப-டாத தொகையை வட்டியுடன் திரும்ப பெறலாம் என தெரிவிக்-கப்பட்டது.
நிகழ்ச்சியில், இந்திய ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீதர், எஸ்.பி.ஐ., மண்டல துணை மேலாளர் பிச்சையா, நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரபாகரன் உள்பட பலர்
பங்கேற்றனர்.

