sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் நாளை மறுநாள் முதல் 'க்யூ-ஆர்' கோடு மூலம் மது விற்பனை

/

கரூரில் நாளை மறுநாள் முதல் 'க்யூ-ஆர்' கோடு மூலம் மது விற்பனை

கரூரில் நாளை மறுநாள் முதல் 'க்யூ-ஆர்' கோடு மூலம் மது விற்பனை

கரூரில் நாளை மறுநாள் முதல் 'க்யூ-ஆர்' கோடு மூலம் மது விற்பனை


ADDED : நவ 28, 2024 06:57 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், கரூரில், 'க்யூ- ஆர்' கோடு மூலம் மது விற்பனை முறை, நாளை மறுநாள் முதல் தொடங்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்க-ளுக்கு, 10 முதல், 40 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவ-தாக புகார் கூறப்படுகிறது. அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி, கூடுதலாக வசூலிக்கும் கடை ஊழியர்களை பணி-யிடை நீக்கம் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவ-டிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சரியான விலைக்கு விற்-பனை செய்ய, டாஸ்மாக்

கடைகளை நவீன மயமாக்கும் முயற்சி-களை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது.தற்போது, உற்பத்தி முதல் விற்பனை வரை என்ற திட்டத்தை, டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, உற்-பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலேயே, மதுபாட்டில்கள் மீது, விற்பனை விலையுடன்

கூடிய 'க்யூ-ஆர்' கோடு ஒட்டப்படும். அந்த பாட்டில்கள், தொழிற்சாலையை விட்டு வெளியே கொண்டு வருவது முதல், விற்பனையாவது வரை

கண்காணிக்கப்-படுகிறது. இதனால், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெறு-வது தவிர்க்கப்பட்டு,

நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்-பனை செய்ய முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.அந்த வகையில், 'க்யூ-ஆர்' குறியீட்டை ஸ்கேன் செய்து, மின்னணு பரிவர்த்தனை வழியாக பணம் செலுத்தி,

மதுபானங்களுக்கு பில் பெறும் வசதியை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக, ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் சோதனை முறையில்

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும், நாளை மறுநாள் முதல் ( நவ.,30)

டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்-டத்தில், 87 டாஸ்மாக்

கடைகளுக்கு, இரண்டு நாட்களாக, 'க்யூ-ஆர்' கோடு ஒட்டப்பட்ட மது பாட்டில்கள் அனுப்பும் பணி நடந்து

வருகிறது.






      Dinamalar
      Follow us