/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மலையாளபகவதி அம்மன் கோவில்; பெரிய தேரில் திருவீதி உலா நிகழ்ச்சி
/
மலையாளபகவதி அம்மன் கோவில்; பெரிய தேரில் திருவீதி உலா நிகழ்ச்சி
மலையாளபகவதி அம்மன் கோவில்; பெரிய தேரில் திருவீதி உலா நிகழ்ச்சி
மலையாளபகவதி அம்மன் கோவில்; பெரிய தேரில் திருவீதி உலா நிகழ்ச்சி
ADDED : மே 03, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம், மலையாள பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணராயபுரத்தில், மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை, பெரிய தேரில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பெரிய தேர் கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள, முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலாவாக தேரில் அம்மன் பவனி வந்தது. பெரிய தேரை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இழுத்து வந்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.