/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிணற்றின் படியில் அமர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
கிணற்றின் படியில் அமர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கிணற்றின் படியில் அமர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கிணற்றின் படியில் அமர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : நவ 05, 2024 01:28 AM
கிணற்றின் படியில் அமர்ந்தவர்
மயங்கி விழுந்து உயிரிழப்பு
அரவக்குறிச்சி, நவ. 5-
அரவக்குறிச்சி அருகே, கிணற்றின் படியில் அமர்ந்திருந்தவர், திடீரென மயக்கம் அடைந்ததால் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.
மண்மங்கலம் அருகே அப்பிபாளையத்தை அடுத்த செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 45. இவரது நண்பர்கள் சிவக்குமார், 43, மூர்த்தி, 45 , ரமேஷ், 44. இவர்கள் நான்கு பேரும் சிவக்குமாருக்கு சொந்தமான, அரவக்குறிச்சி அணைக்கருப்பண சுவாமி கோவில் அருகே உள்ள, தோட்டத்து கிணற்றில் நேற்று காலை குளிக்க சென்றுள்ளனர். அங்கு ரமேஷை தவிர, மூன்று பேரும் கிணற்றில் இறங்கி குளித்துள்ளனர். இதில் பிரகாஷ் குளித்துவிட்டு ஓய்வெடுக்க கிணற்றின் படியில் அமர்ந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், நண்பர்கள் சிவகுமார், மூர்த்தி ஆகியோர் பிரகாஷை கிணற்றில் தேடியும் கிடைக்காததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், பிரகாஷை சடலமாக மீட்டனர். இது குறித்து, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.